1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் (அம்பாசங்கர் கமிஷன்) அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. அந்தந்த சாதி / கிளைச் சாதி / சமுதாயங்களுக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்களின் வரிசையில் அவை குறிப்பிடப்பட்டுள்ளன.
-----------------------------------------------------------------------------------------------
வ.எண் குறியீட்டு எண் சாதி / கிளைச் சாதி / சமுதாயம்
------------------------------------------------------------------------------------------------------------
1 511 ஆங்கிலோ இந்தியர்
2 512 ஜனோலா சால்வேஷன் சர்ச்
3 513 லண்டன் மிஷன் கிறிஸ்தவர்
4 514 மலங்கரா சிரியன் கிறிஸ்தவர்
5 515 ரோமன் கத்தோலிக்க மலங்கரா
சிரியோ மலபார் ரைட்ஸ்
6 516 முற்பட்ட வகுப்புகளிலிருந்து
மதம் மாறிய கிறிஸ்தவர்
7 608 தாவூத்
8 609 கட்ஸு (சைத்)
9 610 மீர்
10 611 மைமன் (சைத்)
11 612 நவாப்
12 613 (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,
ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,
சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள்
13 701 501 செட்டியார்
14 702 அச்சு வெள்ளாளர்
15 703 ஆதி சைவர்
16 704 ஆற்காடு முதலியார்
17 705 ஆரியர்
18 706 அரியூர்ச் செட்டியார்
(அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்)
19 707 ஆற்காட்டு வெள்ளாளர்
20 708 அரும்புக்கூற்ற வெள்ளாளர்
21 709 ஆரிய வைசியச் செட்டியார்
(கோமுட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,
வைசியச் செட்டியார்)
22 710 பலிஜா நாயுடு
(பலிஜா செட்டியார்)
23 711 பேரி செட்டியார்
24 712 போகநாட்டு ரெட்டியார்
25 713 பிராமணர்
26 714 சோழபுரம் செட்டியார்
27 715 தேவதிகர்
28 716 எழுத்தச்சர்
29 717 ஞானியர்
30 718 ஜைனர்
31 719 கடையத்தார்
32 720 கதுப்பத்தான்
33 721 காக்கர் (மோப்பிள்ளா தவிர)
34 722 கம்மவார் நாயுடு
(கம்மவார் நாயக்கர் / நாயுடு)
35 723 கார்காத்தார் (கார்காத்த வெள்ளாளர்,
காரைக்காட்டு வெள்ளாளர்,
காரிக்காட்டுப் பிள்ளை)
36 724 காசுக்கார ஆச்சாரி
37 725 காயல் செட்டி
38 726 கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்)
39 727 கொண்டியர்
40 728 கொங்குச் செட்டியார்
41 729 கொங்கு நாயக்கர்
42 730 கொங்கு ரெட்டியார்
43 731 கொந்தல வெள்ளாளர்
44 732 கொட்டைக்கட்டி வீர சைவம்
45 733 கோட்டைப்புரச் செட்டியார்
46 734 கோட்டைப்புர வைசியச் செட்டியார்
47 735 குக வாணியர்
48 736 மலங்கரா சிரியன் கிறிஸ்தவர்
49 737 மஞ்சுபுத்திரச் செட்டியார்
(மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்)
50 738 மொட்டை வெள்ளாளர்
51 739 மூசிக பலிஜகுலம்
52 740 நாடன் (நாட்டார்)
53 741 நாயர் (மேனன், நம்பியார்)
54 742 நாங்குடி வெள்ளாளர்
55 743 நாட்டுக் கோட்டைச் செட்டியார்
(நாட்டுக் கோட்டை நகரத்தார்)
56 744 ஒருகுண்ட ரெட்டி
57 745 இதர இந்துக்கள் (பிராமணர் தவிர)
காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி,
ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி
58 746 பணிக்கர்
59 747 பத்தான் (பட்டானி), கான்
60 748 ராஜபீரி
61 749 ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர)
தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /
பண்டா ரெட்டியார்
62 750 ராவுத்த நாயுடு
63 751 சைவச் செட்டியார்
64 752 சைவ ஓதுவார்
65 753 சைவப் பிள்ளைமார்
(திருநெல்வேலி மாவட்டம்)
66 754 சைவ சிவாச்சாரியார்
67 755 சைவ வெள்ளாளர்
68 756 சானியர்
69 757 க்ஷத்திரிய ராஜு
(ராஜு, ராஜ பொந்திலி)
70 758 திருவெள்ளறைச் செட்டியார்
71 759 திய்யர்
72 760 தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்
73 761 உலகமாபுரம் செட்டியார்
74 762 வீர சைவர்
(வீர சைவ வெள்ளாளர்)
75 763 வெள்ளாளப் பிள்ளைமார்
76 764 வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர)
77 765 வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்)
78 766 வாரியர் (மலையாளம்)
79 999 சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள்
-------------------------------------------------------------------------------------------------------------
( இச்சாதியினரில் எத்தனை பேர் இன்றும் முற்பட்ட வகுப்பினர் என்றே தத்தம் சான்றிதழ்களில் குறிப்பிடுகின்றனர், சாதிச் சான்றிதழ் பெறுகின்றனர்? என்பதும், தம் சாதிப் பெயரொத்த - ஐயம் ஏற்படாத வகையில் - பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் குறிப்பிட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சான்றிதழ் பெறுகின்றனர்? என்பதும் தனியே ஆராயத் தக்கது. சாதியை மாற்றிக் குறிப்பிட்டுச் சான்றிதழ் பெறுவது என்பது, உண்மையில் இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கப்பட வேண்டியவர்களுக்குக் கிடைக்காமல் போகச் செய்வதோடு, அதன் நியாயத்தை நீர்த்துப் போகச் செய்கிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள்? )
- யுவபாரதி
3 comments:
மலைக்க வைக்குது தகவல்கள்! நான் ஏதோ முற்பட்ட வகுப்பினரில் ஒரு அரை டஜன் எண்ணிக்கையில்தான் பிரிவுகள் இருக்கும் என நினைத்தேன்.
//தம் சாதிப் பெயரொத்த - ஐயம் ஏற்படாத வகையில் - பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் குறிப்பிட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சான்றிதழ் பெறுகின்றனர்?//
//அதன் நியாயத்தை நீர்த்துப் போகச் செய்கிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள்? //
நல்ல கேள்விகள்! ஆனால் பதில் கிடையாது!
intha 1 ikkum 19ikkum enna ottumai allathu ithil ethu perithu entu sollavum plese,
அன்புள்ள கரு...
1 ஆங்கிலோ இந்தியர், 19 ஆற்காட்டு வெள்ளாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இவை குறித்து நீங்கள் கேட்கும் வினா எனக்கு விளங்கவில்லை. கேள்வியைச் சற்று விளக்கமாகக் கேளுங்கள்.
Post a Comment