நன்றி: யாவரும்.காம்
1
கரிக்குருவி
எதுவென்றாய்
காட்டுவதற்குள்
பறந்துவிட்டது
வேப்பமரமெல்லாம்
காகம்.
2
என்னை
அடைத்த வீடு
வாசலில்
சாவி தேடுகிறாய்
கடலில்தானே
எறிந்தாய்
3
இருப்பவனை
உயிரோடு
புதைத்து
மறந்தீர்
இறந்தவர்களோடு
எழுந்து வருகிறான்.
- யுவபாரதி
2 comments:
வித்தியாசமான பார்வைகள்...
முதல் கவிதை நச்
Post a Comment