February 07, 2014

புத்த நித்திரை

எல்லாரிடமும் துயரம்
இருந்தது

வீடுவீடாய் நாடி
கைகனக்கப் பெற்றவன்
அதே மரத்தடியில்
சோர்ந்து கிடக்கிறான்

மோனத் தசையுண்ணும்
களியொடு பேய்கள்

சுற்றிவந்து எக்காளமிடுகின்றன.

- யுவபாரதி

No comments: