February 07, 2014

ஒன்றுமில்லை


வாகனங்கள் வழக்கம்போல்
இயங்கின

கோயில் மதுச்சாலை
புத்தகக்கடைகள் திறந்திருந்தன

மனிதர்கள்
அழுதார்கள் சிரித்தார்கள்
சந்தித்தார்கள் சண்டையிட்டார்கள்

காணாமல் போன அன்று
நான்மட்டும்தான் காணாமல் போனேன்.



- யுவபாரதி

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவ்வளவு தான் வாழ்க்கை...!

Ranjith Mohanasundaram said...

"காணாமல் போன அன்று
நான்மட்டும்தான் காணாமல் போனேன்."
மிக அருமை