நன்றி: பொங்குதமிழ்
ஆலமுண்ட சிவன்
சூலத்தால் குத்திக் கொண்டு
செத்துப் போனான்
போதி மரத்தில் மேலங்கி சுற்றித்
தூக்கிட்டுக் கொண்டான்
சித்தார்த்தன்
சிலுவையில் தொங்கிய
தேவகுமாரனும் எழுந்திருக்கவில்லை
உள்ளுக்குள் அழுததாய்
ஊருக்காய்ப் பிதற்றியவனின்
ஆசன ஆபத்து நீங்கிய
இரண்டொரு பகலில்
நான்காம் முறையாக
இழவுச் சங்கம் இசைத்தார்கள்
முத்துக்குமரனின் ஆவி
அறிவு தப்பி அரற்றும்
தென்வனத்தில்
வலைப் பூக்களில் நெளியும்
விரல்புழுக்களுக்கு இரையாகிறது
எம் இரத்தம்.
2 comments:
கவிதை படிக்கையில் அவமான உணர்வுதான் மீதூருகிறது.ஆசனவாய்த் தலைவர்கள் இருக்கும் வரையில் விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய் என ஒப்பாரி வைத்துக் கொண்டு கரை பார்த்து இருக்கவேண்டியதுதான்.
பரமேசுவரி
தரமான கவிதை
Post a Comment