தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருவண்ணாமலை நகரக் கிளை சார்பில் கவிஞர் ரகசியனின் ‘என் மாமிசத்தைப் பிடுங்கிப் பசியாறும் சைவம்’ என்கிற கவிதை நூல் அறிமுகக் கூட்டம் 24.01.2010 ஞாயிறன்று காலை 11 மணியளவில் திருவண்ணாமலை ஏ.ஐ.டீ.யூ.சி. அலுவலகத்தில் நடைபெற்றது.
பங்கேற்பாளர்களை வழக்கறிஞர் பந்தலராஜ்குமார் வரவேற்றார். பேரா.சு.பிரேம்குமார் தலைமை வகித்த இக்கூட்டத்தில் கவிஞர்கள் தி.பரமேசுவரி மற்றும் ஆர்.மணிகண்டன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கருத்துரைக்குப் பின்னான விவாதத்தில் கவிஞர் பெ.அன்பு, ‘உழைப்பவர் ஆயுதம்’ த.ம.பி., கவிஞர் வெங்கடேஷ் ஆகியோரும் மற்றும் பல கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.
கவிஞர் ரகசியன் ஏற்புரை வழங்கினார். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருவண்ணாமலை நகரக் கிளை சார்பில் அண்ணாதுரை நன்றி கூறினார்.
[ கவிஞர் ரகசியனின் ‘என் மாமிசத்தைப் பிடுங்கிப் பசியாறும் சைவம்’ கவிதை நூல் திரு.டி.எல்.சிவகுமார், பூங்குயில் படைப்பாக்க வெளி , 100, கோட்டைத் தெரு, வந்தவாசி, தி.மலை மாவட்டம் என்ற முகவரியில் கிடைக்கும். விலை ரூ.30/-. இந்நூல் குறித்த ஒரு மதிப்புரை இதே வலைப்பூவில் ‘மாடறுத்த சூரியும் மார்படித்து அழும் பறவையும்’ என்கிற தலைப்பில் உள்ளது.]
No comments:
Post a Comment