September 17, 2010

​ஹைக்கூ


சி. இரவீந்திரநாத் (கன்னடம்)



லங்கட்டி மழை

இன்று மாலை

என் முற்றத்தில் நட்சத்திரங்கள்.




தி

தலைமுறைகளின் தாகம் தணித்தது

ஒருவரையும் அறியாமல்.




சில்வண்டு

இரைச்சலின் கோட்டை

ஒரு மவுன வனம்.




குழந்தையின் அழுகை

வரிசை வரிசையாய்

எரியும் சுடர்கள்.




ன்பிழைக்கு வருந்தும் தருணம்

கண்ணீர்த் துளிகள்

சிறகவிழ்த்துப் பறந்தன.





சீராக வெட்டப்பட்ட

புற்கள் -

நாஜிகள்.




லித்துகளால் தீண்டப்படாத வருத்தம்

ஏரி மேகமாகி

சேரிகளில் பொழிந்தது.




கொட்டும் மழை

அவளது காலடித் தடங்கள்

நிறைகின்றன.




மைதியான தொழுவம்

அ​சை போட்டுக் கொண்டிருக்கிறது

காலம்.




நான் இயற்கைக்கு மாறானவன்

இந்த மீனுக்கு

கவலையோடு பார்க்கிறது.




நன்றி: Indian Literature
ஆங்கிலத்தில்: அங்கூர் பெத்தகேரி
தமிழில்: யுவபாரதி




(மைசூரைச் சேர்ந்த சி. இரவீந்திரநாத் (பி. 1964) மைசூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு மையத்தில் நுண்ணுயிரியியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவரது கன்னட ஹைக்கூ தொகுப்பு மூரூ சாலு மரா ".)

2 comments:

ILA (a) இளா said...
This comment has been removed by a blog administrator.
மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்