September 17, 2010

அம்மாவைப் ​போல [Like Mother]


சந்தீபா நாயிக்கா   (கன்னடம்)


காயம் பட்டு
இரத்தம் வழிந்தது
தேங்காய் எண்ணெய் தடவி
முந்தி கிழித்துக் கட்டுப் போட்டாள் அம்மா


சிறு வடுவோடு குணமான காயம்
காலம் பல கடந்தும்
வலிக்கிறது
அம்மாவின் மரணத்திலிருந்து


அம்மாவை நினைக்கும் போதெல்லாம்
வருடிப் பார்க்கிறான்


இப்போது அம்மாவைப் போலிருக்கிறது
காயம்.



நன்றி: Indian Literature No.255
ஆங்கிலம் வழி தமிழில் : யுவபாரதி


(இளம் கன்னடக் கவிஞரான சந்தீபா நாயிக்கா [Sandeepa Naika]  (பி. 1973) அங்கோலாவைச்சேர்ந்தவர். கன்னடத்தில் "அகணித சாஹ்ரே " என்ற கவிதைத் தொகுப்பைவெளியிட்டுள்ளார்.)



No comments: