September 17, 2010

ஆம், நான் தீண்டத் தகாதவன் !

என். கே. ஹனுமந்தையா (கன்னடம்)
. . .


தீண்டத் தகாதவன்!
ஆம்; நான் பசுவை உண்கிறேன்
பசுவை உண்டு பசுவாகிறேன்
மலையிலும் பள்ளத்தாக்கிலும்
சமவெளியிலும் ஆடுகிறேன்
நிலத்தில் நின்றவண்ணம்
வாலை உயர்த்தி வானவில்லைத் தட்டுகிறேன்
மழையையும் மேகத்தையும் முட்டி
இடுகாட்டில் பொழியச் செய்கிறேன்.



தீண்டத் தகாதவன்!
ஆம்;
பசுவை உண்டு பசுவான
மனிதன் நான்
நான் உங்களின் தீவனத்தை
உண்பதில்லை
உங்களைப் போல்
மனிதராவதும் இல்லை

உங்களைப் போல்
மனிதராவதும் இல்லை
உங்களைப் போல்
மனிதரை உண்பதும் இல்லை.



நன்றி: Indian Literature
ஆங்கிலத்தில்: அங்கூர் பெத்தகேரி
தமிழில்: யுவபாரதி


(திப்தூரைச் சேர்ந்த என். கே. ஹனுமந்தையா (பி.1974) கன்னடத்தில் "ஹிமதாஹெஜ்ஜே" , "சித்ரதா பென்னு" எனும் இரு கவிதைத் தொகுப்புகளும், "எம்.வி. வாசுதேவராவ்" எனும் வரலாற்று நூலும், "ஜலஸ்தம்பா" எனும் நாடகமும் எழுதியுள்ளார். ஜி.எஸ்.எஸ். காவிய பிரஷஸ்தி விருது பெற்றவர். திப்தூர் கல்பதரு முன் கலைக்கல்லூரியில் (Pre-university College) கன்னட விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.)


3 comments:

Aarison said...

நல்ல முயற்சி.இதோடு ஆங்கிலக் கவிதையைத் தந்தால் சிறப்பாக இருக்கும்,இரண்டு இடங்களில் தொய்வான தோற்றம் எனக்குத்தெரிகிறது...முயற்சி சிகரம் தொட வாழ்த்துக்கள்.

Yazhanaathi said...

பாராடுகள் தோழர். சிறப்பான மொழிபெயர்ப்பு.

தாமிரா said...

நன்றி.