September 17, 2010

மண்புழுவின் வாயில் க​ரையும் யா​னைகள்


என். கே. ஹனுமந்தையா (கன்னடம்)



நூறு நூறு யானைகளையும் தேர்களையும்
ஒரு கடுகில் செதுக்கிவிட்டுத்
தன் மீசையை முறுக்கினான்
சிற்பி


சிறு கடுகின் முன்
காலத்தின் கை கால்கள்
அழுகிவிழத் துவங்கியது கண்டு
வாய்விட்டுச் சிரித்தான்


மின்கம்பியிலிருந்து தாழப் பறந்து
வந்த ஒரு சிறு பறவை
கடுகை விழுங்கியது


நிலைகுலைந்த சிற்பி
மெதுவாகக் கண்திறந்தான்
அவன் முன்பு ஒரு கடுகுச் செடி


அதனடியில் கிடந்த
யானைகளும் தேர்களும்
ஒரு மண்புழுவின் வாயில்
கரைந்து கொண்டிருந்தன.



நன்றி: Indian Literature
ஆங்கிலத்தில்: அங்கூர் பெத்தகேரி
தமிழில்: யுவபாரதி


(திப்தூரைச் சேர்ந்த என். கே. ஹனுமந்தையா (பி.1974) கன்னடத்தில் "ஹிமதாஹெஜ்ஜே" , "சித்ரதா பென்னு" எனும் இரு கவிதைத் தொகுப்புகளும், "எம்.வி. வாசுதேவராவ்" எனும் வரலாற்று நூலும், "ஜலஸ்தம்பா" எனும் நாடகமும் எழுதியுள்ளார். ஜி.எஸ்.எஸ். காவிய பிரஷஸ்தி விருது பெற்றவர். திப்தூர் கல்பதரு முன் கலைக்கல்லூரியில் (Pre-university College) கன்னட விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.)


இவ்விடுகைக்கான முகநூல் எதிர்வினை:

ஆரிசன் http://www.facebook.com/aarison

சிறப்பு

மதுமிதா http://www.facebook.com/madhumitha2

ஹனுமந்தையாவின் வேறு கவிதைகள் உள்ளனவா. உங்கள் தமிழாக்கமும் நன்றாக உள்ளது யுவபாரதி. நூறு நூறு எனதான் மூலத்தில் உள்ளதா. நூற்றுக்கணக்கான என வருமா

இரா.முருகன் http://www.facebook.com/profile.php?id=100000409285994>

thanks. ஹனுமந்தையாவின் வேறு கவிதைகள் உள்ளனவா. உங்கள் தமிழாக்கமும் நன்றாக உள்ளது யுவபாரதி

தாமிரா http://www.facebook.com/thamiraria

malum sila kaviuthaikalai mozhipeyarththu podungal

மதுமிதா http://www.facebook.com/madhumitha2

சிற்பி என்றுதான் கவிதையில் வருகின்றதா. கடுகில் ஓவியம் வரைந்ததாக இல்லையா. செதுக்கியது என்றுதான் உள்ளதா. வரைந்தது என இல்லையா. எனில் இன்னும் பூடகமான பொருள் உள்ளதா?


No comments: