July 22, 2016

கிளம்ப வாருங்கள்

குறுக்கும் நெடுக்குமாகத்
தறிக்கத்தான் வெட்டுகிறான்
என மரமே அறியாவண்ணம்
வெட்டிக் கொண்டு வருகிறேன்

வட்ட வட்டமாக்கித்
தரிக்கத்தான் முறிக்கிறான்
என முட்செடிக்கே தெரியாவண்ணம்
முறித்துக்கொண்டு வருகிறேன்

கசையும் மகுடமும் நனைக்கும்
குருதி உடை துணித்து
என் முகம் படியெடுக்கிறீர்கள்

மலையேறியதும்
அரைக்கச்சையோடு மிஞ்சிய உடலை
சுமந்துவரும் பலகைக் கூட்டலில்
சாய்த்துக் கொள்வேன்

கால்கள் சேர்த்து ஒன்றும்
இடக்கையில் ஒன்றுமாக
நானே அறைந்துகொள்வேன்

வலதுகை ஆணியறைய மட்டும்
ஒருவர் வாருங்கள்
தலை சரிந்ததும்
கிளம்பிவிடலாம்.


14.06.2016

No comments: