பூட்டப்படாத
கதவைத் தட்டுகையில்
யாரும் விழித்திருக்கவில்லை
திறந்த அரவம் கேட்டு
திகைத்தெழுந்தவனிடம்
உறங்க இடம் கேட்டான்
ஒதுக்கித் தருவதற்குள்
குத்திட்டமர்ந்து தம் காலிலேயே
கண்ணயர்ந்திருந்தான் புத்தன்
யாரும் விழித்திருக்கவில்லை
திறந்த அரவம் கேட்டு
திகைத்தெழுந்தவனிடம்
உறங்க இடம் கேட்டான்
ஒதுக்கித் தருவதற்குள்
குத்திட்டமர்ந்து தம் காலிலேயே
கண்ணயர்ந்திருந்தான் புத்தன்
உண்ணாமல் உறங்கிவிட்டதான தவிப்போடு
போர்வையாலவன் உடல் மூடி
வெதுப்பித்துச் சரிந்தேன்
விடிந்ததும்
தேடினேன்
நாற்புறமும்
உப்புநீர்
சூழ்ந்த கிழக்கு முற்றத்தில்
எம் உதிரம் ஓட ஓட
ஆழ்ந்த நிட்டையிலிருந்தான்.
சூழ்ந்த கிழக்கு முற்றத்தில்
எம் உதிரம் ஓட ஓட
ஆழ்ந்த நிட்டையிலிருந்தான்.
19.06.2016
No comments:
Post a Comment