January 04, 2010

பாலைவன நெருக்கம்

அணைக்கும் விரல்களில்
ரத்தருசி பார்க்கும்
குரூரம் நகம் நீட்டுகிறது
உச்சி முகர்ந்து பிரிந்ததும்
நெற்றியில் ஒழுகிய
எச்சிலில் விஷவீச்சம்
இடைவிடாத உரையாடலில்
வார்த்தைப் போலிகளின்
குறுகிய இடைவெளி
உயிர்கள் கருகும்
நீண்ட பாலைவன நெருக்கத்தோடு
அருகமர்கிறாய்
குரல்வளைக்குள்
மூச்சடக்கிச் சுழல்கிறது
தவிப்புடன் ஒரு நட்பு வளையம்.

No comments: