அந்தி
புருவம் சுழிக்க கரைமோதுகின்றன
வற்றாத குளத்தின் நீரலைகள்
பாசி தரித்த கடைசீ
படிகளில் நீயும் நானும்
உன்
வெண்பாதம் பருகி
விரைகிறதொரு காலமீன்
வெளி உருக
இழப்பின் கீதமிசைக்கிறாய்
உனக்கான ஏதும்
உன் தேர்வாய்
இல்லை
முகம் சிவக்க அள்ளித்
தெளித்த என்கைநீர்
போல.
( * திருவண்ணாமலை கோயில் தீர்த்தக் குளம் )
-
யுவபாரதி
No comments:
Post a Comment