January 04, 2010

இயலாமையின் சுவர்


பிரிவைக் கொண்டாடினார்கள்
எல்லோரும்
இன்றும் நெருக்கம்தான்
என்கிறாய்
ஒட்டிக் கவிழ்கிறதுன் இமைகள்
ஈரத்தின் சுமையோடு
இயலாமையின் சுவர் மோதி
நிழல் மார்பில்
உன் முகம் ஏந்துகிறேன்.

- யுவபாரதி

No comments: