அச்சம் என்பது…
 நான் வெளுத்து உடுத்தினேன்
நான் வெளுத்து உடுத்தினேன்
உன் முகம் கருத்துப் போனது
நான் செருப்பு அணிந்தேன்
உன் கால் உதறிக் கொண்டது
 நான் வாகனம் வாங்கினேன்
உன் கண் பாதையை வெறித்தது
 நான் புத்தகம் எடுத்தேன்
உன் கை ஆயுதம் தூக்கியது
 நான் வீடு சமைத்துக்
குளிரூட்டினேன்
நீ வியர்த்துக் கொட்டி
அதை வேகவைக்கிறாய்.
 
- யுவபாரதி
 
(தருமபுரிக்கு…)
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
1 comment:
நான் புத்தகம் எழுத்தேன்
உன் கை ஆயுதம் எடுத்தது.
சிந்திக்க வைத்த வரிகள்.
Post a Comment