September 21, 2015

கூரைப் புலம்பல்


கண்பிசிறும் திறக்காது
வெளிப்படும் ஒவ்வொன்றையும்
முட்டை விரிசல்பட்ட
கணமே பறித்து
உயர உயரப் பறக்கிறது
அது
வானம் கூறிப் புலம்ப
கூரை மட்டுமே ஏறமுடிகிறது
எனக்கு
குரல்கேட்டு விழிக்கும்
எல்லாருக்கும் இருக்கிறது
அவரவர் வேலை.


No comments: