என்னைப் பார்க்கவிடாதீர்கள்
கண்பிடுங்கி
சிறைத்தரையில்
வைத்துப் பிதுக்குங்கள்
என்னைக் கேட்கவிடாதீர்கள்
காதறுத்து வான்கோவின்
பக்கத்தில்
வையுங்கள்
என்னைப் பேசவிடாதீர்கள்
நாவறுத்து ஒருவிடியலில்
தூக்கிலிடுங்கள்
என்னை உண்ணவிடாதீர்கள்
எல்லாரும் பார்க்க
சாகவிடுங்கள்.
No comments:
Post a Comment