September 30, 2015

முள்மகுடம்


அப்பன் தச்சனாயிருந்தென்ன
நான் தெரிந்துகொள்ளவில்லை
மலையில் பிரசங்கித்த
முதல் வார்த்தையிலேயே
மரம் தெரிவாகி
அறுக்கத் தொடங்கியாயிற்று
இதோ கல்வாரி முகடு
முள்மகுடம் கண்டு
இப்போது வருகிறீர்கள்
முகம் துடைக்க.

No comments: