நுரைத்துப் பொங்கிய
மேகச் சுமையால் மெய்சிலிர்த்து
இன்னும் எத்தனை நாள்தான்
அசையாதுறங்கும் மேற்குமலை
மலையெழுப்ப விரையும்
காற்றைத்தான் குழப்பிவிடுகின்றனவா
வேதாந்தாவின் இராட்சத வெண்விசிறிகள்
காற்றசைத்த சோளந்தட்டையை
மென்றுவிழுங்கும் ஒட்டகமும்
மூன்று கல்நட்டுச் சமைத்தபடி
விசிறிபார்க்கும் சர்க்கஸ்காரர்களும்
யார்களிக்க மாலைக்குக் காத்திருக்கிறார்கள்
கடந்துவிரையும் பயணிகள்
இறைக்கும் காசுக்காக
காலுயர்த்திக் கனைக்கும் குதிரையோடு
காலகாலமாய்க் காவலிருக்கும்
கணவாய்ச் சாத்தனை
இழுத்துவந்து கேட்டால் தெரியுமா.
No comments:
Post a Comment