September 16, 2016

மாதங்கி வீணை

ஊரெழுப்பத் துடிகொட்டி
உடலெங்கும் அழல்மூட்டி
இருள்நட்டம் பயின்றவன்
பிணம்சுமந்து ஆடுகிறான்

இசைவீணை தலைசாய்த்து
கொடுவாளைக் கைகோர்த்து
தலையோட்டில் மதுவூற்றிக்
களிக்கின்றாள் மாதங்கி.

No comments: