April 13, 2013

செத்தவர் பாவம்

கொலைகள் கண்டு -

கண்ணீர் விட்டோம்
     மென்று கொண்டிருந்தார்கள்

கோபப்பட்டோம்
      சிரித்துக் கொண்டிருந்தார்கள்

கூக்குரலிட்டோம்
      திரும்பிப் பார்த்தார்கள்


கொலைகள் பேச -

ஆளுக்கொரு கடை வைத்தோம்
     கொட்டாவி விட்டார்கள்

ஆளுக்கு ஆள் போட்டியிட்டோம்
     தூங்கி விட்டார்கள்.


யுவபாரதி

1 comment:

indrayavanam.blogspot.com said...

மிக அருமையான கவிதை ,,,,