முன்பு எனக்கு
நதியைத் தெரியாது
இந்தக் கண் மூலையிலிருந்து
அந்தக் கண் மூலைவரைக்கும்
வலைகளை அள்ளி ஓடிய
சிறுமியாகத்தான் முதலில் பார்த்தது
இந்தக் கண் மூலையிலிருந்து
அந்தக் கண் மூலைவரைக்கும்
வலைகளை அள்ளி ஓடிய
சிறுமியாகத்தான் முதலில் பார்த்தது
தூண்டில்கள் தவம்
கிடக்க
இரு கண்களுக்கிடையே
மூன்றாம் காலால் வழிதட்டிய
மூதாட்டியாக நடந்து போனதை
அடுத்தமுறை பார்த்தேன்
இரு கண்களுக்கிடையே
மூன்றாம் காலால் வழிதட்டிய
மூதாட்டியாக நடந்து போனதை
அடுத்தமுறை பார்த்தேன்
ஏழெட்டு குட்டைகளாய்ப்
பார்வைக்கு எஞ்சுகிறது இம்முறை
ஒன்றேபோல் உருட்டிமுழிக்கும்
சொற்களென நெருக்கிக் கிடப்பவை
வெவ்வேறு கூடைகளில் நிரம்புகின்றன
பார்வைக்கு எஞ்சுகிறது இம்முறை
ஒன்றேபோல் உருட்டிமுழிக்கும்
சொற்களென நெருக்கிக் கிடப்பவை
வெவ்வேறு கூடைகளில் நிரம்புகின்றன
குட்டைமீன்களை
எனக்குப் பிடிப்பதில்லைதான்
தெரிந்தவர்கள் விற்றால்
வாங்கிப் போக வேண்டியிருக்கிறது.
எனக்குப் பிடிப்பதில்லைதான்
தெரிந்தவர்கள் விற்றால்
வாங்கிப் போக வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment