September 16, 2016

கீழக் கோபுரம்

காற்றோடு நுழைந்தேன்

கோணல் ஓவியமாக
விழுந்து கிடந்தது
கோபுர நிழல்

நிலை நிலையாக ஏற ஏற
அசைந்து கொண்டிருந்தது

கலசமெட்டிப் பற்றியதும்
எழுந்து நிற்கிறது

நிஜத்தோடு ஒட்டி
உலர்கிற கணம்
பிடி உதிர்த்து
வானம் விழுகிறேன்.

No comments: