September 03, 2016

தூரத்துக் கப்பல்

காலெற்றித் தெறித்த மண்
அலை பற்றிப் போகிறது

நகக்கண் தங்கிய துகள்
புரையேற
வானமூச்சோடு சரிகிறேன்

அசைந்தசைந்து மறைகிறது
தூரத்துக் கப்பல்.