January 04, 2010

சாத்தனூர் அணை - 1


அருகருகே
நழுவவிட்ட மரங்கள்
இன்னமும் பூக்கின்றன
தேவை ஏதுமில்லை
பூக்களுக்கு

ஒளிந்துகொண்டது
நம்மில் நீந்தும்
சில தருணங்களில்
சிறகுலர்த்தும்
கரையோரம் ஓர் நீர்க்காகம்.

- யுவபாரதி

No comments: