நிறங்களின் நிரந்தரம்
இழந்து தவிக்கிறது வானம்
ஓவியனின் தூரிகை திருப்தியற்றது
தலை தூக்க சலித்து
பாறை இடுக்குகளின்
தற்கொலை முனைக்கு
விரைகிறது நதி
சடலத்தின் குளிரில் மூழ்கி
எழுகின்றன சில கால்தடங்கள்
காற்றின் விரலில் கரைகடந்து
சூன்யதாகத்துக்கு இரையாகலாம்
தனித்தலின் மெல்லிய வலுவுடன்
கரிக்கும் அலைவிளிம்புகளை
ருசிக்கும் மட்டும் வாய்க்கிறது
தீண்டலின் துக்கம்.
- ஆர்.மணிகண்டன்
No comments:
Post a Comment