திரும்புகிறேன்
கால்கள் கனக்க
சரிகிறேன்
பார்வை தொலைத்து
செவித்திரையில் சன்னமாய்
இடித்து நகர்ந்த
வாகனத்தின் ஓலம்
காலப் பருந்தின்
கூரிய நகம்
தோளை அழுத்துகிறது
உயிர்க் குலையில்
விஷம் பரவ
கதறத் துடிக்கிறது
மௌனம்
நீ தவிர்க்கிறாய்
நான் திரும்புகிறேன்
இன்றும்.
-
யுவபாரதி
No comments:
Post a Comment