சிறு பெண்
உதடு குவித்தூதிய சோப்புக் குமிழி
ஈரமாய்த் தெறிக்கிறது
நமக்கான இடைவெளியில்
பிடியின் இறுக்கம்
தாளாது முணுமுணுக்கிறது
துருப்பிடித்த தடுப்புக்குழலின்
உள்ளீடற்ற கேவல்கள்
அங்கே
பிரையண்ட்
பூங்காவில்*ஈரம் மங்கிய இலைகளைத்
துருத்தி நடந்த
ஆட்காட்டி விரல் தொலைத்த
சிறுவனின் உள்ளங்கையில்
வெளிறிய என் போல் முகம்
அகப்படாத காலந்தொட்டு
ரகசிய ஒட்டடையில்
உயிர் உறிஞ்சிய
குரலற்ற முகாரி
ரத்தம் உறைக்கும்
உல்லாசிகளின் கூப்பாடு விலக்கி
மோதுகிறது என்
உறக்கமற்ற கனவுச் செவிகளில்.
( * கொடைக்கானலில் உள்ள இடங்கள்)
-
யுவபாரதி
No comments:
Post a Comment