கனவுகளின் தகிப்பில்
புகைகிறது உயிர்
வெண்புறா விட்டகன்ற
கரங்களில்
கழன்ற தோலும்
பழுப்பு ரத்தமுமாய்ச் சரிகிறது
வெளிச்சம் உலர்த்திய வெற்றுடல்
இமை வருடி மௌனம் தின்னும்
மணல் திசுவின் ஈமொய்க்கும் கருணை
நரம்பில் நழுவி
விரிகிறது இருளின் வாசனை
அழைத்து விரட்டி
தாளமிடுகிறது வெளியின் மடி.
-
யுவபாரதி
No comments:
Post a Comment