August 25, 2010

குளிர்கால மதியம் - கோனார்க்

ஜெயந்த் மஹாபாத்ரா (ஒரியா)

நன்றி: Indian Literature

இங்கே
அது மட்டும்
நிழல்களின் நடனமும்
ஒளியினதும்

ஒரிஸாவின் சீரழிந்த சரிதத்தில்
நூலாடும் நிலையில் அமர்கின்றது
அக்கோயில் சுவர்களில்
புலன் கொல்லும் நாட்டிய கற்பாவைகளின்
பரிகாசத்திற்கு மத்தியில்

காற்றின் புழுங்கின குரல்
எமது கடந்தவைகளிலிருந்து
வீசியும் சீரழிந்து வருகிறது

இங்கே
வெதுவெதுப்பான குளிர்கால பகலின்
மெல்லிய சூரிய ஒளி மட்டும்
நிர்வாணமான உடைந்த
கல்லுடல்கள் மீது நகர்கிறது
மௌனமான காலடித் தடங்களால்

எனினும் சில இருண்ட பிம்பங்களை
ஒளிமிக்க கற்களில்
எழுப்பியிருக்கிறது அதன்
புராதன மரணத்திலிருந்து.


தமிழில்: மணிகண்டன்

No comments: