August 25, 2010

மரங்களின் அமைதியற்ற ஆன்மா


திலீப் புருஷோத்தம் சித்ரே (மராட்டி)
நன்றி: Indian Literature

திலீப் சித்ரே
மரங்களின் அமைதியற்ற ஆன்மா
மூடுபனி போல
பாலையில் கவிழ்ந்திருக்கிறது
மரங்கள் ஏதுமற்ற
பறவைகளின் சங்கீதமற்ற ஒரு வனத்தில்
ஹோவென்ற பாலையின் நடனத்தில்
வார்தைகளின்மை தவிக்கிறது
அதன் உடலிலேயே
சங்கமத்தின் அர்த்தம்
நிழலுடன் சேர்வதல்ல
எனினும்
நிழலுடன் சேர்கிறது
அழிந்த காட்டில் முடிவற்ற
சருகுகளின் சப்தம்.
தமிழில்: மணிகண்டன்

No comments: