September 15, 2015

பூதத்தின் கதை


கடற்கரைக்கா வந்துவிட்டோம்
குறுநடையின் வேகபாவனையில்
தூரம் தெரியவில்லை
உன் கையோங்கலுக்கு அஞ்சி
கடலுக்குள் ஓடுகிறது அலை
ஒளிய இடம் தராது கடல்விரட்ட
என் தோளேறிச் சிரிக்கிறாய்
தூரத்துக் கப்பல் பொம்மை வேண்டுமெனக்
கன்னம் தட்டுகிறாய்
பிஞ்சுக்கை காற்றில் வரையும்
ஓவியத்திலிருந்து குதிக்கும்
குட்டிதேவதைகளின் கதைகேட்க
தொடுவானமும் காது தீட்டுகிறது
ஒற்றைக் கண்ணும்
எண்ணிலி நகங்களும் கொண்ட
பூதத்தின் கதை மட்டும் ஏன்
சொல்ல வரவில்லை உனக்கு.


(இன்பாவுக்கு)



No comments: