September 15, 2015

ஆனைமலை


வால்பிடித்து முதுகேறி
உயர உயரக் கண்விரிந்து
நகரம் சிறுக்கிறது
மத்தகத்தில் கண்ணயர்ந்த
கணமொன்றில் அசையாதெழுந்து
திசை கலைத்திருக்கிறது
பெருங்கல் யானை
எத்திசையில் இறங்குவோம்
இனி.


(ஜீவகரிகாலனுக்கு)



2 comments:

Anonymous said...

கதிரவன்தழுவும் செந்நிறத்தானை
அமர்ந்துபார்க்கும் நமச்சிவாயனை
கடம்பவனத்தின் காவல்யானை
கடப்பவர்க்குப் பாறையிலானை!.

Yuvabharathy Manikandan said...

அழகா இருக்கு மணிச்சிறல்