இரண்டு யுகம்
முன்
அகழ்ந்த உலோகத்தை
நான்கு யுகம்
முன்
அறிந்த பூதத்திடம்
காட்டியா
காய்ச்சித்
தீட்டுகிறீர்கள்
இன்னமும்
தொலைவு புலப்படுத்தாத
வாகனம்
உறுத்தாது குளிரூட்டும்
அறை
மொழி உலர்த்திய
சொல்
கொண்டல்லவா
இப்போது தீட்டப்படுகின்றன
ஆயுதங்கள்.
No comments:
Post a Comment