September 16, 2015

எத்தனை நேரம்


மிதக்கும் கண்ணில்
நெளியும் கூத்து யார்கட்டியது
குமிழ்ந்து மேல்வெடிக்கும்
சொற்கள் எவருடையது
காது ஏன் விட்டு விட்டு
தெளிகிறது
எத்தனை நேரம்
பார்த்துக் கொண்டிருப்பாய்
குவளையை
குடித்து மடி.


No comments: