November 03, 2016

உயிரோடு இருந்தேன்

காட்டப்பட்ட வழியில்
கோடு பிழையாது
நடத்தப்பட்ட போது
கம்பிகளுக்குப் பின்னான
கண்களைக் கண்டும்
காணாது நடந்தபோது
நாற்கோணம் வரைபட்ட
சுண்ணாம்புக் கோட்டுக்குள்
நிறுத்தப்பட்ட போது
கட்டப்பட்ட கண்தெரிய
கருந்துணி முகம் மூடியபோது
கயிறு முகுளம் தொட்டு நெருக்க
கடிகாரம் பார்க்கப்பட்டபோது
கால் நழுவி அலைந்து
குழி வீழ நொடிக்கும்போது

உயிரோடு இருந்தேன்.

26.10.2016

No comments: