Showing posts with label கழுகு. Show all posts
Showing posts with label கழுகு. Show all posts

September 16, 2016

வேடிக்கைக் கழுகு

கண்ணை இருள் தள்ளி
காற்றைத் திசை விசிறி
பறந்த கழுகு
மேற்கு மலை முகட்டில்
இறக்கை மடித்து
என் பயணத்தை
வேடிக்கை பார்க்கிறது.

September 21, 2015

கூரைப் புலம்பல்


கண்பிசிறும் திறக்காது
வெளிப்படும் ஒவ்வொன்றையும்
முட்டை விரிசல்பட்ட
கணமே பறித்து
உயர உயரப் பறக்கிறது
அது
வானம் கூறிப் புலம்ப
கூரை மட்டுமே ஏறமுடிகிறது
எனக்கு
குரல்கேட்டு விழிக்கும்
எல்லாருக்கும் இருக்கிறது
அவரவர் வேலை.