Showing posts with label நாக்கு. Show all posts
Showing posts with label நாக்கு. Show all posts

January 22, 2017

சும்மாயிருங்களேன்

இன்றும் பார்வையுள்ள இரண்டு கண்கள்
இக்கணம் வரை மூச்சுவிட்டிழுக்கிற ஒரு மூக்கு
வாய்க்குள் சுருண்டிருக்கிற ஒரே ஒரு நாக்கு
இதுவரை தாமாய் உதிராத முப்பத்திரண்டு பற்கள்
சுற்றும் முற்றும் திரும்ப முடிகிற ஒரு கழுத்து
துடித்துக் கொண்டேயிருக்கிற துவண்ட இதயம் ஒன்று
வயிறு குறி ஒன்றொன்று கை கால்கள் இரண்டிரண்டு
பிடுங்கப்பட வேண்டாம்
நசுக்கப்பட வேண்டாம்
நறுக்கப்பட வேண்டாம்
நொறுக்கப்பட வேண்டாம்
இறுக்கப்பட வேண்டாம்
குத்தப்பட வேண்டாம்
கிழிக்கப்படவும் துண்டிக்கப்படவும் வேண்டாம்

கையே நாக்கே
உங்களுகாகவும்தான் சொல்கிறேன்
சும்மாயிருங்களேன்.

21.01.2017