Showing posts with label கோப்பை. Show all posts
Showing posts with label கோப்பை. Show all posts

December 07, 2013

காட்சிகள்

1

காதடைத்து
உயிர்வற்றிச் சாகும்
யாசகனின் திருவோடு

இரக்கத்தின் ஒரு பருக்கை
பலத்த ஓசையுடன்

விழுகிறது.

2

காற்றின் நெருக்குதலில்
சிறகு தொலைத்த
பறவை

இமை மூடி 
வானம் பார்த்து 

விழுகிறது.

3

பல வண்ணப் பூக்கள்
தளும்பிய சாடி
காலி செய்யப்பட்டது

பூவற்ற வெறுமையில்
நொறுங்கி

விழுகிறது.


- யுவபாரதி