Showing posts with label புத்தகச் சந்தை. Show all posts
Showing posts with label புத்தகச் சந்தை. Show all posts

January 21, 2014

புத்தகச் சந்தை

சொற்களின் எல்லைக்குள்
தன்னிலை தேடுவோர்
ஒப்பனை பூண்டனர்

துரித உணவோடும் பழரசத்தோடும்
விளம்பரங்கள் வாய்மாற
புகைப்பட வெளிச்சத்தில்
நூல்களுக்கு வணிகப் பித்தேறியது

அழுகை புன்னகையோடும்
வெறுமை பகட்டோடும்
விடுதலை அதிகாரத்தோடும்
விலையாகிறது.

-    யுவபாரதி