Showing posts with label கோட்சே. Show all posts
Showing posts with label கோட்சே. Show all posts

June 30, 2012

நம்பினார் கெடுவதில்லை!



என் இதயம் கல்லாலானது என்றனர்
சுமக்க முடியாது சுமந்தேன்

என் இதயம் கள்ளத்தனமானது என்றனர்
ஓசையின்றி துடிப்பது கேட்டேன்
என் இதயம் விஷமத்தனமானது என்றனர்
காந்தியும் கோட்சேவும் ஏசுவும் யூதாசும்
கைகோர்த்துத் திரிவது கண்டேன்

என் இதயம் ஆழமானது என்றனர்
எட்டிப் பார்க்கையில் தவறி விழுந்து
தொலைந்து போனேன்.


-    யுவபாரதி