Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

January 23, 2014

தோரணவாயில்


இரைச்சலும் இயல்பான நடிப்பும்
மிக்கதுன் உலகம்

மண்புரண்டு முனகும்
என் சொல்லுக்குக் குரல்வளமில்லை

மழுங்கிய அதன் விரல்களால்
அபிநயம் காட்டவும் முடியாது

அரங்கிற்கு ஏகும் மொழிரதம்
ஏதும் நசுக்கிவிரையும் முன்
மரத்தோரம் எத்திவிட்டுச் செல்
என் சொல்லை

காகம் அதன் கண் கொத்தட்டும்
எறும்பு அதன் உடல் தின்னட்டும்.


- யுவபாரதி