முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
Showing posts with label
பூனை
.
Show all posts
Showing posts with label
பூனை
.
Show all posts
May 05, 2015
இருப்பு
முள்வேலி தழுவி
மொக்குதிர்த்த கொடிமுல்லையும்
உடைந்த கால்தூக்கி
தத்திவரும் குட்டிப்பூனையும்
கவிதை தெரியாத என்னோடு
காத்திருக்கின்றன.
January 26, 2014
நேற்று இன்று
1
எல்லா நாளும்
ஒன்றுபோல்தான் இருக்கிறது
வேறு வேறு என்கிறோம்.
2
கால்கட்டிய கயிறு
எம்பி நடக்கிறது மாடு
ஒட்டிய வயிறு மூச்சிரைக்கிறது.
3
கதவுக்கும் திரைச்சீலைக்குமான இடுக்கு
குட்டிப்பூனைக்குப் போதும்
நான் எங்கே ஒளிவது.
-
யுவபாரதி
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)