பிறப்பு இறப்பிலிருந்து
விடுதலை கொள்ள
உருவமும் துறந்து புறப்பட்டேன்
இன்று பார்ப்பது
இருவிதப் பிறவிக் குருடர்களை
ஒரு சிலர் எனக்குச் சிலைகள் வைத்துப்
ஆபரணங்களால் அலங்கரிக்கிறார்கள்.
மறு சிலர் என் சிலைகளை உடைத்தெறிகிறார்கள்.
நன்றி : Indian Literature No.258 ஆங்கிலம் வழி தமிழில் : யுவபாரதி
[குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் பிரவீண் கதாவி (பி.1951) நன்கு அறியப்பட்ட குஜராத்தி தலித் கவிஞரும் சிறுகதை ஆசிரியரும் ஆவார். குஜராத்தியில் மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தி, மராட்டி, கன்னடம் மற்றும் உருதுவிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன]
[பொறியியல் வல்லுனரான பலபார்த்தி இந்திராணி (பி.1977) பெங்களூரில் வசிக்கிறார். ICFAI பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். 2005 -இல் வெளிவந்த இவரது முதல் கவிதைத் தொகுதி இஸ்மாயில் விருதைப் பெற்றது.]
நன்றி : Indian Literature No.256 ஆங்கிலம் வழி தமிழில்: யுவபாரதி
[சிறந்த குஜராத்திக் கவிஞரும், விமர்சகரும், நாடக ஆசிரியருமான சீதான்ஷு யஷஸ்சந்திரா (பி.1941 ) தனது 'ஜடாயு' கவிதைத் தொகுப்பிற்காக 1987 -ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார். பல நூல்களை எழுதியுள்ள இவர் Encyclopedia of Indian Literature (1977-81) முதன்மை ஆசிரியராகவும், சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்துள்ளார். தற்போது வடோதராவில் வசித்து வருகிறார்.]
நன்றி: Indian Literature ஆங்கிலத்தில்: அங்கூர் பெத்தகேரி தமிழில்: யுவபாரதி
(மைசூரைச் சேர்ந்த சி. இரவீந்திரநாத் (பி. 1964) மைசூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு மையத்தில் நுண்ணுயிரியியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவரது கன்னட ஹைக்கூ தொகுப்பு மூரூ சாலு மரா ".)
தீண்டத் தகாதவன்!
ஆம்; நான் பசுவை உண்கிறேன்
பசுவை உண்டு பசுவாகிறேன்
மலையிலும் பள்ளத்தாக்கிலும்
சமவெளியிலும் ஆடுகிறேன்
நிலத்தில் நின்றவண்ணம்
வாலை உயர்த்தி வானவில்லைத் தட்டுகிறேன்
மழையையும் மேகத்தையும் முட்டி
இடுகாட்டில் பொழியச் செய்கிறேன்.
தீண்டத் தகாதவன்!
ஆம்;
பசுவை உண்டு பசுவான
மனிதன் நான்
நான் உங்களின் தீவனத்தை
உண்பதில்லை
உங்களைப் போல்
மனிதராவதும் இல்லை
உங்களைப் போல்
மனிதராவதும் இல்லை
உங்களைப் போல்
மனிதரை உண்பதும் இல்லை.
நன்றி: Indian Literature ஆங்கிலத்தில்: அங்கூர் பெத்தகேரி தமிழில்: யுவபாரதி
(திப்தூரைச் சேர்ந்த என். கே. ஹனுமந்தையா (பி.1974) கன்னடத்தில் "ஹிமதாஹெஜ்ஜே" , "சித்ரதா பென்னு" எனும் இரு கவிதைத் தொகுப்புகளும், "எம்.வி. வாசுதேவராவ்" எனும் வரலாற்று நூலும், "ஜலஸ்தம்பா" எனும் நாடகமும் எழுதியுள்ளார். ஜி.எஸ்.எஸ். காவிய பிரஷஸ்தி விருது பெற்றவர். திப்தூர் கல்பதரு முன் கலைக்கல்லூரியில் (Pre-university College) கன்னட விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.)
thanks. ஹனுமந்தையாவின் வேறு கவிதைகள் உள்ளனவா. உங்கள் தமிழாக்கமும் நன்றாக உள்ளது யுவபாரதி
தாமிரா http://www.facebook.com/thamiraria
malum sila kaviuthaikalai mozhipeyarththu podungal
மதுமிதா http://www.facebook.com/madhumitha2
சிற்பி என்றுதான் கவிதையில் வருகின்றதா. கடுகில் ஓவியம் வரைந்ததாக இல்லையா. செதுக்கியது என்றுதான் உள்ளதா. வரைந்தது என இல்லையா. எனில் இன்னும் பூடகமான பொருள் உள்ளதா?