Showing posts with label நஞ்சு. Show all posts
Showing posts with label நஞ்சு. Show all posts

January 14, 2017

கொஞ்சம் சாகவிடுங்கள்

நல்லது கெட்டதென
என்னதான் இருக்கிறதென
நஞ்சு குடித்தேன்
கழுத்தை எப்படி மறந்தேன்
கைகழுவியவனுக்கு
நன்றி சொல்லி
மௌனமாய்ச் சிலுவைப்பட்டேன்
மூன்று நாளாகியும் ஏன் சாகவில்லை
துயரம் களையத்தான்
தவமிருந்தேன்
உடல் உகுத்த பின்னும்
இப்படி ரவை நிரப்புகிறீர்கள்
என்னைக் கொஞ்சம்
சாகவிடுங்கள்.

12.01.2017

September 16, 2016

விடு தேவி

கழுத்துப் பிடியை
விடு தேவி

தலையில் நீரூற்றி
வரங்கள் பிடுங்கியோர்
மனமுவந்து ஈந்ததிது

விழுங்கியாக வேண்டும்.

January 22, 2014

சாதல் இனிது


கயிற்றை விடவும் கழுத்தை 
நெரிக்கிறது

கத்தியை விடவும் ஆழத்தில் 
அறுக்கிறது

நஞ்சை விடவும் மெல்ல 
அடைக்கிறது

கடலை விடவும் கணத்தில் 
இழுக்கிறது

இரயிலை விடவும் எங்கோ 
எறிகிறது வாழ்வு

ஆகவே சாகவில்லை.


- யுவபாரதி