Showing posts with label செவ்வரளி. Show all posts
Showing posts with label செவ்வரளி. Show all posts

August 19, 2013

விடியற்பண்


இருளில் முகமொளித்த சுவர்க்கோழி
முணுமுணென்று சலிக்கிறது

மின்விளக்கில் கண்பொய்த்த வௌவால்
தலைசுற்றிப் பறக்கிறது

வாயிற்படியில் அலைவுறும் பெருச்சாளி
கற்றாழை இடுக்கில் பம்முகிறது

எவரும் விழித்திரா அதிகாலையில்
என்னையே பார்த்துக் குரைக்கிறது
தெருநாய்

எப்போதும் என் கண்நிறைக்கும்
வெள்ளெருக்கும் செவ்வரளியும்
காற்றற்று ஒலிக்கும் என் பாடலை
அசைவற்றுக் கேட்கின்றன.

- யுவபாரதி