Showing posts with label ஞாநி. Show all posts
Showing posts with label ஞாநி. Show all posts

March 10, 2013

"கேணி" இலக்கியச் சந்திப்பில் நீதிபதி சந்துரு : ஒலிப்பதிவு

            நீதிபதி சந்துரு
"கேணி" இலக்கியச் சந்திப்பு ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமை  சென்னை கே. கே. நகர் அழகிரிசாமி சாலையிலுள்ள பத்திரிகையாளர் ஞாநி இல்லத்தில் நடைபெறுகிறது. ஞாநியும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் இந்நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். 

இன்று 10-03-2013 "கேணி" இலக்கியச் சந்திப்பில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு பங்கேற்றுப் பேசினார். நேற்று முன்தினம் கடந்த சர்வதேச மகளிர் தினத்தை நினைவூட்டி,  தமது நீதிபதி பணிக்காலத்தில் சந்தித்த பல வழக்குகள் - குறிப்பாகப் பெண்கள் நீதி வேண்டி  தொடுத்த வழக்குகள் மற்றும் அவ்வழக்குகளில் தனது தீர்ப்புகள் குறித்தும், அதன் பின்னணியாக முற்போக்கான மாற்றங்களுக்கு எளிதில் முன்வராத நம் சமூக நிலை குறித்தும் பேசினார்.பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மேற்படி நிகழ்வின் ஒலிப்பதிவைக் கீழ்க்காணும் இணைப்புகளில் mp3 வடிவில் கேட்கலாம்.






ஒலிப்பதிவு : யுவபாரதி

December 10, 2012

"கேணி" இலக்கியச் சந்திப்பில் ராஜ் கௌதமன் : ஒலிப்பதிவு

ராஜ் கௌதமன்
"கேணி" இலக்கியச் சந்திப்பு ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை  சென்னை கே.கே.நகர் அழகிரிசாமி சாலையிலுள்ள பத்திரிகையாளர் ஞாநி இல்லத்தில் நடைபெறுகிறது. ஞாநியும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் இணைந்து இந்நிகழ்வைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். 

கடந்த 09/12/2012 அன்றைய கேணி இலக்கியச் சந்திப்பில் எழுத்தாளர் ராஜ் கௌதமன் பங்கேற்றுப் பேசினார். அவரது இளமைக் காலம், கல்விச் சூழல், கல்லூரிப் பணி, எழுத்துலகம் என்று தமது வாழ்வனுபவங்கள், நூல் வாசிப்பின் மீதான தனது ஆர்வம், அதன்படி உருவான தம் சிந்தனைகள் என்று அவர்தம் உரையை நிகழ்த்தினார். உரையின் முடிவில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

நிகழ்வில் பங்கேற்ற ராஜ் கௌதமன் அவர்களை ஞாநி வரவேற்றுப் பேசினார்.  பாஸ்கர் சக்தி நன்றி தெரிவித்தார். 

மேற்படி நிகழ்வின் ஒலிப்பதிவைக் கீழ்க்காணும் இணைப்புகளில் mp3 வடிவில் கேட்கலாம்.





ஒலிப்பதிவு : யுவபாரதி

December 11, 2011

'கேணி'யில் பேரா.அ.மார்க்ஸ் உரை : ஒலிப்பதிவு

அ.மார்க்ஸ்
11/12/2011 ஞாயிறு மாலை சென்னை கே.கே.நகரில் 'கேணி' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சமூக ஆய்வாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பேரா.அ.மார்க்ஸ் பேசினார். உரை மற்றும் உரையாடல் எனும் வடிவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தனது இளமைக்காலம், குடும்பச் சூழல், கல்வி, வாசிப்பு, சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார். பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் தமது கருத்துகளைப் பதிவு செய்தார்.  

முன்னதாகப் பத்திரிகையாளர் ஞாநி வரவேற்றுப் பேசினார்.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஞாநியும்   எழுத்தாளர் பாஸ்கர்சக்தியும் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...



ஒலிப்பதிவு : யுவபாரதி