Showing posts with label வௌவால். Show all posts
Showing posts with label வௌவால். Show all posts

January 25, 2014

இரவுக் காட்சிகள்


மின்கம்பிக் காகம்
இருளில் இடறியது
சிறகு எரிகிறது.


2


தனியறையில் இருளின் கால்கள்
முகம் புதைத்து அழுகிறான்
கண்பொய்த்த இரவலன்.


3


மனக்கால் மண்டபம்
இருளில் தொங்குகிறது
வௌவால்கள் துணையோடு.


- யுவபாரதி

August 19, 2013

விடியற்பண்


இருளில் முகமொளித்த சுவர்க்கோழி
முணுமுணென்று சலிக்கிறது

மின்விளக்கில் கண்பொய்த்த வௌவால்
தலைசுற்றிப் பறக்கிறது

வாயிற்படியில் அலைவுறும் பெருச்சாளி
கற்றாழை இடுக்கில் பம்முகிறது

எவரும் விழித்திரா அதிகாலையில்
என்னையே பார்த்துக் குரைக்கிறது
தெருநாய்

எப்போதும் என் கண்நிறைக்கும்
வெள்ளெருக்கும் செவ்வரளியும்
காற்றற்று ஒலிக்கும் என் பாடலை
அசைவற்றுக் கேட்கின்றன.

- யுவபாரதி