பெரும்
பரிவுடன்
உன்
உள்ளங்கை அளவாக்கிய
அவன் உலகத்தைச்
சிறு
பந்தெனச் சுருட்டினாய்
அக்கம்
பக்கம் மேல் கீழ்
எப்பக்கம்
எறிந்தாலும்
கைக்கே
திரும்பியது அது
ஆடத்
தொடங்கிய ஆட்டம்
அலுத்துப்
போன கணத்தில்
நண்பர்களோடு
மைதானம் நகர்ந்தாய்
பெருவெளி
தோதுறா சிறு பந்தை
வீட்டுக்குள்
வீச
நான்கு
சுவர்களுக்குள்
மோதி
மோதிச் சுழன்றடங்கியது அது
நீரில்லை
காற்றில்லை
தீயில்லை
மனிதரில்லை
பந்துக்குள்
உறைந்த தனியன்
நாட்பட
நாட்பட
மோனத்
தவத்தில்
மூழ்கி
மூழ்கிக் கடவுளானான்.
- யுவபாரதி